Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனிருத்துதான் என் மானசீக ஹீரோ! -கவர்ச்சி நடிகை மனீஷா கௌர் பேட்டி

அனிருத்துதான் என் மானசீக ஹீரோ! -கவர்ச்சி நடிகை மனீஷா கௌர் பேட்டி
, புதன், 23 டிசம்பர் 2015 (14:33 IST)
தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக  இருக்கிறது.


 
 
இந்த ‘சாய்ந்தாடு’ படத்தில், இந்திய - மலேசிய கூட்டுத் தயாரிப்பான மனீஷா கௌர் என்ற அழகி நடித்து, அராபிய வகைப் பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடியிருக்கிறார். அவரின் நடனத்தையும், உடல் வனப்பையும் கண்டு இப்பவே தமிழ்சினிமா இயக்குனர்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு வருகிறார்கள். தமிழ்சினிமாவை பற்றியும், ரசிகர்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்த பஞ்சாபி பெண்ணிடம் பேசிய போது- 
 
உங்களைப் பற்றி…?
 
நான் பஞ்சாபி மலேயா பெண். நடனம் எனது பேஷன்.  
 
‘சாய்ந்தாடு’ படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது…?
 
‘சாய்ந்தாடு’ படத்தில் ஒரு அராபிக் டைப் கிளப் பாடலுக்கு மலேசியாவில் டான்ஸ் ஆடவும், மலேசியா போர்ஷனில் நடிக்கவும் டைரக்டர் கஸாலி ஆள் தேடுவதாகக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டேன். ஆடிஷனில் என் நடனத் திறமை அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதுபோக, ‘அரபுக்குதிரை நீதானோ..’ என்ற பெப் பாடல் மிக அற்புதமாக இருந்தது. சினிமாவுக்காகக் காத்திருந்த எனக்கு ‘சாய்ந்தாடு’ படமும், ‘அரபுக்குதிரை..’ பாடலும் மிக அருமையான சந்தர்ப்பம் என்றே கருதுகிறேன். மேலும், ‘அரபுக்குதிரை’ பாட்டுக்கு நான் போட்டிருக்கிற குத்தாட்டத்துக்கு கூடிய சீக்கிரம் தமிழ்நாடே என்னோட சேர்ந்து ஆடினாலும் ஆச்சர்யமில்ல..
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

இதுவரை எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்? 
 
தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். ‘சாய்ந்தாடு’ படம்  முழுவதுமாக முடிந்து விட்டது. கூடிய விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்தப் படம் வெளிவந்தபின் தமிழில் குத்தாட்டத்துக்கு எனக்கென்று தனியிடம் இருக்கும். இப்பவே என்னுடைய புகைப்படங்கள் எப்படி லீக் ஆனதோ தெரியவில்லை. குத்தாட்டம் போட கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். முதலில் சாய்ந்தாடு வரட்டும். ஏனென்றால் அதில் நான் வெறும் குத்தாட்டம் மட்டும் போடவில்லை. படத்தின் முக்கியமான சில காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.

webdunia

 

 
 
இனிவரும் படங்களிலும் குத்தாட்டம் போடுவதுதான் எண்ணமா? 
 
என் உடல்வாகுக்கு ஏற்பதான் எனக்கு ரோல் கொடுப்பார்கள். அதனால் நான் நம்புவது குத்தாட்டத்தைதான்.
 
தமிழ் படங்கள் பார்ப்பீர்களா? தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம்?
 
தனிப்பட்டு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. அஜீத், விஜய், சூர்யா, இப்போ… அதர்வா! அதற்கப்புறம் அனிருத்தை ரொம்ப பிடிக்கும். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது தோற்றம், உடல்வாகு, சில ஆல்பங்களில் அவரது பிரசன்டேஷன்… ரியலி ஹீ இஸ் வெரி நைஸ் & ஹீ இஸ் மை சாய்ஸ்.
 
உங்க முதல் படமான ‘சாய்ந்தாடு’ பற்றி?
 
மெடிக்கல் கிரைம் கதை. சில காட்சிகளைக் கண்டேன். சூப்பர். கிராஃபிக்ஸ் நிறைய இருக்கு. ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ட்ரீட்தான்.
 
‘சாய்ந்தாடு’ படத்தில் ஆதர்ஸ் & அனு கிருஷ்ணா நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சுப்பு பஞ்சு,  மனீஷாவோடு ரிமாலா பல்லன் என்ற மலேசிய பெண்மணி, கிரேன் மனோகர், காதல் சுகுமார், பாவா லக்‌ஷ்மணன், அல்வா வாசு, நெல்லைசிவா, கிங்காங் மற்றும் ஆங்கிலேயர்கள் & ஆப்பிரிக்கர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil