Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியில் சாதித்துவிட்டு தமிழுக்கு வருவேன் - அக்ஷரா ஹாசன் பேட்டி

Advertiesment
அக்ஷரா ஹாசன்
கமல் - சரிகா தம்பதியின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் படிக்கிறகால லட்சியம், கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்பது. படித்து முடித்தபின் அது, இயக்குனராக பரிமாணம் கொண்டது. உதவி இயக்குனராக பயிற்சி எடுத்து வந்த நேரம் ஷமிதாப் திரைப்படம் அவரை நடிகையாக்கியது. இப்போது, அக்கா ஸ்ருதியைப் போல் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பதே அக்ஷராவின் லட்சியம். ஆனால் தமிழில் நடிக்க மாட்டேன் என்கிறார். ஏன்? அவரே பதிலளிக்கிறார்.
 

 
தமிழில் ஏன் நடிக்க மறுக்கிறீர்கள்?
 
எனக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கருதுகிறேன். முதலில் இந்திபட உலகில் காலூன்ற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருக்கிறது. இங்கு சாதித்துவிட்டுதான் தமிழ், தெலுங்கு படங்களுக்கு வருவேன்.
 
ஓய்வு நேரங்களில் என்ன செய்ய பிடிக்கும்?
 
வாரத்துக்கு ஒருமுறையாவது ஃபுட்பால் ஆடுவேன். ஃபுட்பால் எனக்கு மிகவும் பிடிக்கும். சாகஸ விளையாட்டுகள் என்றால் எனக்கு விருப்பம்.
 
படங்களை தீர்மானிப்பது முதல் உங்கள் விஷயங்களை யார் முடிவு செய்கிறார்கள்?
 
என்னுடைய விஷயங்களை நான்தான் தீர்மானிக்கிறேன். எனது தந்தை கமல்ஹாசனும், தாய் சரிகாவும் திறமையான நடிகர்கள். வாழ்க்கையில் சொந்தமாக நான் முடிவுகள் எடுத்துக்கொள்ள அவர்கள் எனக்கு உரிமை அளித்துள்ளனர்.
 
இப்போது என்ன செய்கிறீர்கள்? அடுத்து என்ன இந்திப் படத்தில் நடிக்கிறீர்கள்?
 
இப்போதைக்கு என்னை ஒரு சிறந்த நடிகையாக உருவாக்கி வருகிறேன். இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறேன். இன்னும் எந்த படமும் முடிவாகவில்லை.
 
பாப் கட் ஹேர்ஸ்டைலில்தான் எப்போதும் இருக்கிறீர்கள். இதுதான் பிடிக்குமா?
 
ஆமா. நான் நீளமாக முடி வளர்த்துக் கொண்ட சந்தர்ப்பங்கள் குறைவு.
 
யாரை கண்டால் உங்களுக்கு அலர்ஜி?
 
பொய் பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது. ஏதோ பறி கொடுத்தவர்கள் மாதிரி உற்சாகமில்லாமல் இருப்பவர்களை சுத்தமாகவே பிடிக்காது.
 
நீங்கள் எந்த மாதிரியான ஆள். கண்டிப்பானவரா? இல்லை ஜாலியானவரா?
 
நான் நிறைய விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பேன். அடுத்தவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். அவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்ப்பேன். 
 
உங்களுக்குப் பிடித்த நிறம்?
 
கறுப்புதான் எனக்குப் பிடித்த நிறம். இப்போது வாழ்க்கையில் வேறு புதிய நிறங்களையும் நிரப்பிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil