Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் தோற்றத்தை கிண்டல் பண்றாங்க... மனம் வருந்திய அஜித் பேட்டி!

Advertiesment
என் தோற்றத்தை கிண்டல் பண்றாங்க... மனம் வருந்திய அஜித் பேட்டி!
, புதன், 9 மார்ச் 2022 (19:53 IST)
தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகராக முன்னணி இடத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் கடந்த சில வருடங்களாகவே எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலோ, விளம்பரங்களிலோ கலந்துக்கொள்வதில்லை. இதற்கான காரணம் குறித்து பழைய பேட்டி ஒன்றில் அஜித் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது
 
அவர் கூறியதாவது, நான் நடித்து வெளியான படம் குறித்து என்னிடம் பேட்டி எடுக்க வந்தவர்கள் படம் குறித்து கேள்வி கேட்காமல் நான் குண்டா இருக்கேனு கமெண்ட் அடிக்கிறாங்க. இதுவரை எனக்கு 15 ஆபரேஷன் நடந்திருக்கு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம். அதை நினைச்சு நான் சந்தோஷபடுறேன்.
 
நான் நல்ல டான்சரா இல்லாம இருக்கலாம், ஆனால் முயற்சி பண்றேன், இவ்வளவு சிகிச்சைகளுக்கு பிறகும் ஹெலிகாப்டர்-ல இருந்து குதிக்கிறேன். சண்டை போடுறேன். ஆனால், தொடர்ந்து எனது பர்சனல் தோற்றத்தை கிண்டல் பண்றது வருத்தமா இருக்கு" என கவலையோடு பேசியுள்ளார். இதன் காரணத்தால் தான் அவர் பொது  நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!