Publish Date: Fri, 11 Nov 2022 (17:21 IST)
Updated Date: Fri, 11 Nov 2022 (17:24 IST)
நடிகை சினேகா விஜயுடன் நடித்த அனுபவங்களை குறித்து அண்மையில் பகிர்ந்துக்கொண்டார்.
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா. விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் விஜய் இப்போ மட்டும் இல்ல நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியான மனிதர் தான்.
அவர் எப்போதும் பந்தா காட்டாமல் நடந்துகொள்வது தான் அவரது தனி சுபாவம். கேமரா ஆன் ஆனதும் வேற விஜய் பின்னர் ஆப் ஆனதும் பவ்யமான மனுஷன் அவர். ஒரு கலகலப்பான காமெடி காட்சியில் நடித்தாலும் கேமரா ஆப் ஆனதும் அமைதியாக மாறிடுவார். என கூறினார்.
papiksha joseph
Publish Date: Fri, 11 Nov 2022 (17:21 IST)
Updated Date: Fri, 11 Nov 2022 (17:24 IST)