Publish Date: Fri, 16 Oct 2015 (14:41 IST)
Updated Date: Fri, 16 Oct 2015 (14:53 IST)
வருமானவரித் துறை சோதனைக்குப் பிறகு சமந்தாவின் பைனான்ஸ் ஸ்டேட்டஸுக்கு ஒரு முக்கிய அந்தஸ்து கிடைத்துள்ளது.
தமிழில், அனேகமாக எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். பணம் சம்பாதித்த திருப்தி சமந்தாவின் பேச்சில் எதிரொலிக்கிறது.
இன்றைய தேதியில் தமிழில் அதிக படங்களில் நடிக்கிற நாயகி நீங்கதான் என்பது தெரியுமா?
நான் விக்ரமுடன் நடித்த, 10 எண்றதுக்குள்ள படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தனுஷுடன் நடித்த, தங்க மகன் முடிந்துவிட்டது.
இப்போது, சூர்யாவுடன் 24, விஜய்யுடன் ஒரு படம் என இரண்டு படங்களில்...
நடித்து வருகிறேன். தெலுங்கில் இரண்டு படங்கள். இதுதான் நான் நடிக்கிற படங்கள். நான்தான் அதிக படங்களில் நடிக்கிறேனா என்பதெல்லாம் தெரியாது.
முன்பைவிட இப்போது கதைகளில் அதிக கவனம் செலுத்துவதாக கூறுகிறார்களே...?
நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நல்ல கதைகள் அமையவில்லை. கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தேன். எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் அப்படித்தான் நடிக்க வேண்டும்.
இப்போது ஒரு நிலையான இடத்துக்கு வந்து விட்டேன். இனி கண்ட படங்களில்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..
நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனக்கான கதைகளை தேட ஆரம்பித்திருக்கிறேன்.
நல்ல கதைகள் என்றால், எந்த மாதிரி கதைகள்...?
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள்.
அருந்ததி, ருத்ரம்மாதேவி மாதிரியா?
அப்படி எந்தப் படத்தையும் முன்மாதிரியாக வைத்து நான் கதை கேட்பதில்லை. கேட்கிற கதையில் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன்.
விருப்பமான கதை அமைந்தால், சம்பளத்தை குறைத்துக் கொள்வீர்களா?
இனிமேல் பணத்துக்காக மட்டும் நடிக்க வேண்டும் என்பது இல்லை. கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். என்னை திருப்திப்படுத்தும் கதை அமைந்தால் பணத்தை பெரிதாக பார்க்க மாட்டேன். அதற்காக சம்பளம் உள்ளிட்ட விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளவும் தயார்.
சினிமாவில் உங்க லட்சியம்...?
அப்படி எதுவும் வைத்துக் கொண்டதில்லை. இப்போதைக்கு, என் நடிப்புத் திறமையை காட்டும் சாகஸத்துக்கு தயாராகிவிட்டேன். அதை மையமாக வைத்தே கதைகள் கேட்டு வருகிறேன்.
உங்களுக்கும், மகேஷ் பாபுவுக்கும் என்னத்தான் சண்டை...?
எந்த சண்டையும் இல்லை. அது மீடியாக்களால் உருவாக்கப்பட்டது. சண்டை இருந்தால் அவரது பிரமோற்சவம் படத்தில் நடிக்க அழைப்பார்களா?