Publish Date: Fri, 03 Feb 2017 (10:49 IST)
Updated Date: Fri, 03 Feb 2017 (17:47 IST)
பல பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் இலியானா. தமிழில் நண்பன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது, பிகினி உடை மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் இவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெண்களை வெறும் போகப்பொருளாகவே சிலர் பார்க்கின்றனர். இது மாற வேண்டும். சமூக வலைத்தளங்களில் ஈவ் டீசிங் உள்ளிட்ட பாலியல் தொல்லைகளை நான் நேரடியாகவே சந்தித்துள்ளேன். அதனால் மிகவும் பாதிக்கப்பட்டேன். பல மோசமான தகவல்கள் என் செல்போனுக்கு வந்துள்ளன. சிலர் மிகவும் ஆபசமாக பேசி அதை ஆடியோவாக எனக்கு அனுப்பினார்கள். அது எனக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவற்றையெல்லாம் அழித்து விட்டேன். இவற்றையெல்லாம் வெளியே சொல்ல சங்கடமாக இருக்கிறது.
ஆனால், அதிலிருந்து மீள மனதை திடப்படுத்திக் கொண்டேன். பெண்களை யாரும் கேவலமாக பார்க்கக் கூடாது” என அவர் கூறினார்.