Publish Date: Mon, 06 Apr 2015 (09:44 IST)
Updated Date: Mon, 06 Apr 2015 (09:48 IST)
நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவருடைய ரசிகர் மன்றத்தின் புதிய தலைவராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர்.
ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பையொட்டி, விஷால் தனது ரசிகர்களை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சந்தித்தார். தமிழகம் மட்டுமின்றி பிற மாநில ரசிகர்களும் அதில் கலந்து கொண்டனர்.
ரசிகர்கள் சந்திப்புக்குப் பின் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார்.
திடீரென்று ரசிகர்களுடன் சந்திப்பு ஏன்...?
நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எனக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ரசிகர் மன்றத்தில் சில மாற்றங்கள் செய்ய விரும்பினேன். என் ரசிகர் மன்றத்துக்கு, அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் என்று புதிதாக பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பெண் கல்விக்கு என் ரசிகர் மன்றம் முக்கியத்தும் கொடுக்கும். கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளில் கழிப்பறை கட்டித் தரும். பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவிகளுக்கு கல்லுnரியில் படிக்க உதவி செய்யும்.
இதில் அரசியல் நோக்கம் உள்ளதா?
இதுவரை நான் தனியாகவும், ரசிகர்கள் தனியாகவும் செய்துவந்த நற்பணிகனை இனி இணைந்து செய்யவிருக்கிறேnம். அதனால், மன்றங்களை முறைப்படுத்துவது அவசியமாக இருந்தது. இது முழுக்க நற்பணி சார்ந்தது. அரசியல் நோக்கமோ, ஈடுபாடோ சுத்தமாக இதில் இல்லை. கனவில் கூட, எனக்கு அரசியல் ஆசை கிடையாது.
அடிக்கடி ரசிகர்கள் சந்திப்பு நடக்குமா?
என் ரசிகர் மன்றங்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் செயல்படும். எல்லா மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்திக்க உள்ளேன்.
புதிய படம் பற்றி...?
நான் இப்போது நடிக்கும் படத்துக்கு பாயும் புலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்தின் படத்தலைப்பு. இந்த பெயர் வைத்த பிறகு என் படத்துக்கு பலம் வந்திருக்கிறது.
என்ன மாதிரியான கதை...?
இதுவும் ஒரு போலீஸ் கதைதான். ஆனால் வழக்கமான போலீஸ் கதை கிடையாது. நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய படம். நிஜ முகங்களையும் மனிதர்களையும் இதில் பார்க்கலாம். முதல்முறையாக காஜல் அகர்வால் இதில் என்னோடு நடிக்கிறார்.
நடிகர் சங்கப் பிரச்சனை எப்படி போய்க் கொண்டிருக்கிறது?
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இரண்டு பேருடனும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இருவர் மீதும் மதிப்பு, மரியாதை இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி வியர்வையில் உருவான அந்த கட்டிடம் புதுப்பொலிவுடன் கட்டப்பட வேண்டும் என்பதே என் ஆசை. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகே நான் திருமணம் செய்து கொள்வேன்.
Mahalakshmi
Publish Date: Mon, 06 Apr 2015 (09:44 IST)
Updated Date: Mon, 06 Apr 2015 (09:48 IST)