Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனசு வலிக்கிறது - சக்சஸ் மீட்டில் சங்கடப்பட்ட விஷாலின் பேட்டி

Advertiesment
விஷால்
ஆம்பள படத்தின் சக்சஸ் மீட். படம் நன்றாகப் போகும் பூரிப்புடன் வந்தார் விஷால். வடபழனி நட்சத்திர விடுத்தியில் நடந்த இந்த நிகழ்வின் போது விஷால் அளித்த பேட்டி உங்களுக்காக.


 
சுந்தர் சி. இயக்கத்தில் முதலில் நடித்த மத கஜ ராஜா இன்னும் வெளியாகாமலேயே உள்ளதே?
 
மத கஜ ராஜா வெளியாகாததில் மனது வலிக்கிறது. அந்தப் படம் 2012 -இல் வெளியாக வேண்டியது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை. அது வந்து இருந்தால் தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் லாபம் சம்பாதித்து இருப்பார்கள். 
 
அது வெளியாகாததால்தான் ஆம்பளயில் நடித்தீர்களா?
 
மத கஜ ராஜா வெளியாகாத வலியிலிருந்து மீள மீண்டும் சுந்தர் சி. யுடன் இணைந்து ஆம்பள படத்தை எடுத்தேன். இது வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளுகிறது. மகிழ்ச்சியாக இருக்கு.
 
பொங்கலுக்கு யார் வந்தாலும் வெட்டுவேன் என்று நீங்கள் சொன்னதாக ஆர்யா பேசினாரோ...?
 
பொங்கலுக்கு ‘ஆம்பள’ படம் வரும் என்றும் வேறு எவன் வந்தாலும் வெட்டுவேன் என்றும் நான் சொன்னதாக நடிகர் ஆர்யா பேசி இருக்கிறார். அப்படி நான் சொல்லவே இல்லை. சொல்லாததை ஆர்யா கொளுத்தி போட்டதால் சில நாட்கள் பயத்திலேயே இருந்தேன். யாரேனும் தகராறுக்கு வருவார்களோ, போலீஸ் வீட்டுக்கு வருமோ என்றெல்லாம் பயந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. இனிமேல் எனது பட விழாக்களுக்கு ஆர்யா போன்ற நண்பர்களை அழைப்பது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன். 
 
திருட்டு விசிடி நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?
 
ஐ, ஆம்பள படங்களின் திருட்டு சி.டி.க்கள் வந்துள்ளன. தியேட்டர்காரர்கள் திருட்டு சி.டி.யில் படத்தை எடுக்கவில்லை. தியேட்டரில் சீட்டில் உட்கார்ந்து யாரோ எடுத்து இருக்கிறார்கள். ஒரு தியேட்டரில் படத்தையும், இன்னொரு தியேட்டரில் சவுண்டையும் எடுத்து மிக்சிங் செய்துள்ளனர்.
 
ஹன்சிகாவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
 
ஹன்சிகா எனக்குப் பிடித்த நடிகை. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
அடுத்து என்ன படம் செய்கிறீர்கள்?
 
சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும், சண்டக்கோழி இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறேன். 
 
மத கஜ ராஜா வெளிவருமா?
 
ஆம்பள வெற்றி பெற்றதால் மத கஜ ராஜா வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தப் படம் எப்போது வந்தாலும் ஜெயிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil