Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர் - சிவ கார்த்திகேயன்

Advertiesment
தனுஷ்
சிவ கார்த்திகேயனின் சினிமா கரியரைப் போலவே வேகமாக இருக்கிறது அவரது ட்விட்டர் செயல்பாடும். சமூக வலைத்தளத்தை வளைக்க முடிந்தால் மட்டுமே இளைஞர்களின் மனதை கவர முடியும் என்ற 21 -ஆம் நூற்றாண்டின் இணைய சூத்திரம் அவருக்கு தெரிந்திருக்கிறது. ட்விட்டரில் இணைந்த உடனேயே ரசிகர்களுடன் சாட் செய்து அவர்களை வசப்படுத்தியுள்ளார்.
சாட்டில் ரசிகர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு சிவ கார்த்திகேயன் அளித்த பதில்களும், வழக்கமான பத்திரிகை பேட்டியைவிட சுவாரஸியம். இனி அந்த சுவாரஸியமான கேள்விப் பதில்களைப் பார்ப்போம்.
 
தனுஷ் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள்...?
 
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்.
 
உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகர்...?
 
ஜிம் கேரி.
 
தலைவர் ரஜினி நடித்ததில் பிடித்த படம்...?
 
பாட்ஷா.
 
சிம்பு நடித்ததில் பிடித்த படம் எது?
 
விண்ணைத்தாண்டி வருவாயா.
 
யாரிடமிருந்து மிகச்சிறந்த பாராட்டு உங்களுக்கு கிடைச்சிருக்கு?
 
ஒரு பாட்டிகிட்டயிருந்து. அவங்க ஆரோக்கியமாக இருக்கிறதுக்கும், உயிரோடு இருக்கிறதுக்கும் என்னுடைய காமெடிதான் காரணமா இருக்குன்னு சொன்னாங்க. அது ஒரு ஆசிர்வாதமாக இருந்தது.
 
உங்க மனைவி பற்றி...?
 
எனக்கு மிகப்பெரிய ஆதரவு. எனக்கு எந்த டென்ஷனும் தர மாட்டாங்க. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு சொல்வேன்.
 
படம் இயக்கும் எண்ணம் உள்ளதா?
 
ஒரு படத்தை இயக்குவது மிகவும் கஷ்டம். அதுவும் முழுநீள காமெடிப் படத்தை இயக்குவது சாதாரண விஷயமில்லை.
 
வெறும் காமெடிப் படங்களில் மட்டும் நடிக்காமல் ஐந்து படத்துக்கு ஒரு படம் வித்தியாசமாக முயற்சி செய்யலாமே?
 
அதற்கு முயற்சி பண்றேன். ஆனால், எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கு. சிலர் காமெடி கேட்கிறாங்க, சிலர் ஆக்ஷன் கேட்கிறாங்க. இரண்டையும் பேலன்ஸ் பண்ண முயற்சி பண்றேன்.
 
ஒரு காமெடியன்கூட கண்டிப்பா நடிச்சே ஆகணும்னா யாரை சொல்வீங்க?
 
கவுண்டமணி சார்.
 
விஜய் ரசிகர்கள்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்டே ஆகணும். அவரை மிமிக்ரி பண்ணி ரொம்பவே கிண்டல் பண்ணியிருக்கீங்க...
 
அது எல்லாம் நான் எப்பவோ முன்னால பண்ணுனது. வேணும்னே பண்ணுனது இல்லை. சினிமாவுக்கு வந்த பின்னாலதான், அதனால வர்ற பிரச்சனைகள் புரியுது.
 
காக்கி சட்டை பற்றி...?
 
அந்தப் படம் 14 கோடியில் எடுத்தது. வசூல் 50 கோடிக்கும் மேல். அப்போ படத்தைப் பற்றி நீங்களே முடிவு பண்ணிக்குங்க.
 
தனுஷ் போன் நம்பரை உங்க மொபைல்ல என்ன பெயர்ல போட்டு வச்சிருக்கீங்க?
 
ஜீனியஸ்.

Share this Story:

Follow Webdunia tamil