Publish Date: Sat, 06 Jun 2015 (13:21 IST)
Updated Date: Sat, 06 Jun 2015 (14:37 IST)
கடந்த 3 வருடங்களாக சிம்புவிடமிருந்து படம் வரவில்லை. அந்தக் குறையை போக்குவதுபோல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் சிம்பு. ட்டிவிட்டரில் இந்த சுவாரஸிய கேள்வி - பதில் சிறப்பாக அரங்கேறியது.
இது நம்ம ஆளு பாடல்கள் வெளியீடு எப்போது?
ஜுன் மாதம் இருக்கும். தேதியை நானே பிறகு அறிவிக்கிறேன்.
வாலு ரிலீஸ் தேதியை சொல்ல முடியுமா?
ஜுன் 26 அல்லது ஜுலை 3 படம் திரைக்கு வரும்.
செல்வராகவன் படத்தில் நடிப்பது எப்படியிருக்கிறது?
செல்வராகவன் படத்தில் நடிப்பதன் மூலம் அவரிடத்தில் இருந்து நிறைய கற்று வருகிறேன்.
எப்போது திருமணம் செய்து கொள்வதாக எண்ணம்?
ஆண்டவன் தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏன் நின்றது?
அது நிற்கவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு பிடித்த இயக்குனர்?
எனக்குப் பிடித்த இயக்குனர்கள் சேகர் கபூர், ராஜமவுலி.
தல அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள்?
அவர் எப்போது என்னை அழைத்தாலும், நான் நடிக்க ரெடி.
இந்த வருடம் எத்தனை படம் ரிலிஸ் செய்வீர்கள்?
மினிமம் 3.
உங்கள் ரசிகர்களை பற்றி ஒரு சில வார்த்தைகள்?
என் கடினமான தருணங்களின் என்னுடன் இருந்தவர்கள் அவர்கள் மட்டுமே.
தனுஷுடனான நட்பு பற்றி கூறுங்கள்?
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களே.
வேட்டை மன்னன் படம் வருமா?
கண்டிப்பாக வரும். வாலு படத்தின் இடைவேளையில் வேட்டை மன்னன் டிரைலர் வரும்.
எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?
சினிமாவில் எல்லா துறைகளும் எனக்கு தெரியும். ஆனால் அரசியல் தெரியாது.
உங்கள் அப்பா படங்களில் பிடித்தவை?
அப்பா இயக்கத்தில் ‘ஒரு தலை ராகம்,’ ‘மைதிலி என்னை காதலி’ எனக்கு பிடித்த படங்கள்.
விஜய் பற்றி...?
விஜய் என்னுடைய அண்ணனாகவும் நண்பராகவும் இருக்கிறார்.
உங்களுக்குப் பிடித்த நாயகி?
அலியா பட்.