Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த வருடம் என்னுடைய நடிப்பில் 3 படங்கள் வெளியாகும் - பிரசாந்த் பேட்டி

Advertiesment
பிரசாந்த்
முதல் படம் வைகாசி பிறந்தாச்சு சூப்பர்ஹிட். அடுத்தடுத்து மணிரத்னம், ஷங்கர், பாலுமகேந்திரா என்று முன்னணி நடிகர்களின் படங்கள். ஒருகாலத்தில் ஓஹோ என்றிருந்த பிரசாந்தின் கரியரை அவரது கல்யாணம் காலி செய்தது. மீண்டும் புதுத்தெம்புடன் அவர் திரும்பி வந்திருக்கும் படம்தான், புலன் விசாரணை இரண்டாம் பாகம். அப்படம் குறித்தும், தனது வருங்கால திட்டம் குறித்தும் அவர் கூறியவை இங்கே உங்களுக்காக.
 
புலன் விசாரணை இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
 
ஆர்.கே.செல்வமணி ஒருநாள் என்னிடம் வந்து, புலன் விசாரணை பார்ட் 2 பண்ணப் போறேன், அதில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நானும் உடனே ஓகே சொன்னேன். 
 
அவருடனான உறவு எப்படி இருக்கிறது?
 
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என இரண்டு மறக்க முடியாத ஆக்ஷன் படங்களை தந்தவர். மூன்றாவதாக செம்பருத்தி என்ற அழகான காதல் கதையில் என்னை நடிக்க வைத்தார். அவர் என்னிடம் ஒரு சகோதரரைப் போல பழகுவார்.
 
புலன் விசாரணை முதல்பாகம் ஆட்டோ சங்கரின் கதை மற்றும் உடல் உறுப்புகள் கொள்ளை பற்றியது. இரண்டாம் பாகம் என்ன கதை?
 
நாட்டில் நடக்கும் சில தீய விஷயங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை செல்வமணி எடுத்துள்ளார். இதுவொரு முழுநீள ஆக்ஷன் படம். செல்வமணியின் மற்ற படங்களைப் போலவே இதிலும் திரைக்கதை அருமையாக இருக்கும்.
webdunia
பட அறிப்பு சில வருடங்கள் முன்பே வெளியிடப்பட்டதே?
 
ஆமாம், இது மூன்று வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.
 
இந்தப் படத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான வேடம்?
 
அசிஸ்டெண்ட் கமிஷனராக நடித்திருக்கிறேன்.
 
படப்பிடிப்பில் ஏதாவது சுவாரஸியமான சம்பவம்?
 
இந்தப் படப்பிடிப்பில் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது. நான் அசிஸ்டெண்ட் கமிஷனர் உடையில் இருக்க, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள பாலத்தில் ஷுட்டிங் நடந்தது. அப்போது ஹெவி ட்ராபிக் ஜாம். நான் போலீஸ் உடையில் கையை காட்டியதும் எல்லா வாகனங்களும் ஓரமாக போய்விட்டன. ட்ராபிக் ஜாமை சரிசெய்ய கமிஷனரே வந்திட்டார் என மக்கள் பேசிகிட்டாங்க. அப்புறம் நிஜ போலீஸ் வர, அவர்களிடம் விஷயத்தை சொல்லி ஒருவழியாக அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம்.
 
இனி இதுபோன்று நீண்ட இடைவெளிகள் எடுத்துக் கொள்வீர்களா?
 
இல்லை. இந்த வருடம் நல்லபடியாக ஆரம்பித்திருக்கிறது. இந்த வருடமே சாஹசம் உள்பட 3 படங்கள் என்னுடைய நடிப்பில் வரிசையாக வெளியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil