Publish Date: Tue, 12 Jan 2016 (12:15 IST)
Updated Date: Tue, 12 Jan 2016 (12:21 IST)
கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். பூஜா குமாருக்கு அவரது ரிட்டையர்டு நேரத்தில் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 என மூன்று கமல் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஆளையே காணும் என்று பார்த்தால், பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் உற்சாகத்துடன்.
ஏன் தமிழ்ப் படங்களில் உங்களை பார்க்க முடியவில்லை?
படங்களை தேர்வு செய்துதான் நடிக்கிறேன். இப்போது மீன்குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். இதில் காளிதாஸ் ஜெயராம், பிரபு நடிக்கின்றனர். சிவாஜி கணேசன் குடும்பத்தை சோந்தவருடன் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்.
இந்தப் படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?
பெண் தாதாவாக நடிக்கிறேன். தனித்துவமிக்க கதாபாத்திரமாக தெரிந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். நகர்ப்புறத்தை சேர்ந்த தாதா. மலேசியாவில் முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர்.
இந்தப் படத்துக்காக ஸபெஷல் பயிற்சி எதுவும் எடுத்துக் கொண்டீர்களா?
நடிப்புப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். ஹாலிவுட் நடிகர்கள் அல்பசினோ, ராபர்ட் டி நீரோ ஆகியோரது படங்களைப் பார்த்து எப்படி கதாபாத்திரமாவது என்பதை தெரிந்து கொண்டேன். கமலின் நாயகன் படத்தையும் ரெபரன்சுக்காக பார்த்தேன்.
இல்லை. ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி. படப்பிடிப்புக்காக இன்னும் சில தினங்களில் மலேசியா செல்கிறோம்.
தமிழ்ப் படங்கள் பார்ப்பீர்களா?
காக்கா முட்டை, தனி ஒருவன் இரண்டும் என்னை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்தன.
நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் போதுமான முக்கியத்துவம் கிடைக்கிறதா?
நடிகைகளுக்கு இது ரொம்ப நல்ல நேரம் என்றுதான் சொல்வேன். நடிகைகளை மையப்படுத்திய நிறைய படங்கள் இப்போது வருகின்றன. நானே, வஸந்த் இயக்கத்தில் அப்படியொரு படத்தில் நடித்து வருகிறேன்.
அடுத்தது என்னென் படங்களில் நடிக்க உள்ளீர்கள்?
தமிழ், இந்தியில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். பொங்கலுக்குப் பிறகு இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.