பாண்டியா பைசா வசூல் மூவி - மனிஷா யாதவ்
, புதன், 29 ஜனவரி 2014 (12:35 IST)
வழக்கு எண் படத்தில் நமக்குக் கிடைத்த நல்ல நடிகை மனிஷா யாதவ். நடிப்புத் திறமையை வைத்து மட்டும் இதை சொல்லவில்லை.
சம்பள விஷயத்திலும் பிற நடிகைகள் போல் கறார் காட்டுவதில்லை. பட்டைய கௌப்பணும் பாண்டியா படத்தில் மனிஷாவை ஒப்பந்தம் செய்ததே சம்பளத்தை படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப குறைத்துக் கொண்டதால்தான். நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் நடித்தவர் முதல்முறையாக வெரைட்டியான ரொமான்டிக் காமெடியில் நடித்துள்ளார். பிரஸ்மீட்டில, பாடல்கள் வெளியீட்டு விழாவில் அந்த மகிழ்ச்சியை மனிஷாவிடம் காண முடிந்தது.பட்டைய கௌப்பணும் பாண்டியாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது விதார்த். அவர்கூட ஜன்னல் ஓரம் படத்தில் நடிச்சேன். அவர்தான் என்னைப் பற்றி டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார் சார்கிட்ட சொல்லியிருக்கார். எஸ்.பி.ராஜ்குமார் சார் கதை சொன்னதும் உடனே ஒத்துக் கிட்டேன். ரொம்ப நல்ல கதை.
இயக்குனரைப் பற்றி...?எஸ்.பி.ராஜ்குமார் சாரைப் பார்த்தால் அவருக்குள்ள இருக்கிற காமெடி சென்ஸ், நல்ல காமெடி சீன்களை உருவாக்குகிற திறமை தெரியாது. காரணம் அவர் ரொம்ப அமைதியானவர். முக்கியமாக அவருக்கு பொறுமை ரொம்ப அதிகம்.