ஜெனிவாவில் ஜ.நா மனித உரிமைகள் ஆணையர் ஜீத் அல் ஹீசைன் போர்க்குற்றம் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம் என்றும் சர்வதேச விசாரணை தேவை என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது "போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இந்த நீதிமன்றம் அமைக்க தேவையான உதவிகளை செய்ய ஐ.நா மனித உரிமை ஆணையம் தயாராக உள்ளது என்று ஐ.நா அறிவித்துள்ளது.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டன. மேலும்,போரின் போது இருதரப்பும் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்தது என்று ஐ.நா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
*பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா போன்றவர்களை இலங்கை ராணுவம் படுகொலைச் செய்தது.மேலும் போரின் போது சர்வதேச அளவில் இலங்கையில் மட்டும் தான் அதிகமாக பத்திரிகையாளர்களை கொல்லப்பட்டுள்ளனர்.
*போரின் போது இலங்கை ராணுவத்தினர் மற்றும் கடற்படை தளபதிகள் தமிழ் பெண்களை பாலியில் வன்முறை நடந்துள்ளது.
*தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்.
*ராணுவமும் ,விடுதலைபுலிகளும் இலங்கையில் மனித உரிமை மீறல்.
*இலங்கையில் மக்களை சந்தித்து விசாரணை நடத்த ஐ.நாவிற்கு இலங்கை அரசு ஒத்தழைக்கவில்லை
*இலங்கையின் நீதித்துறை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க முன் வரவில்லை.உள்ளிட்ட சாரம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.