இலங்கையின் வெலிகடை மகசின் சிறையின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில், இலங்கையின் வெலிகடை மகசின் சிறையின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.