ஐநா சபையின் 70ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்தபோது இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவை சந்தித்துள்ளார்.
இருவரும் சிறிது நேரம் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேசியுள்ளனர். அப்பொழுது இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து மனித உரிமைகள் கவுன்சில் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது “இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த மாதம் இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த அதிபர் சிறிசேனாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதன் மூலம் ஜனநாயகத்தின் மீது இலங்கை கொண்டுள்ள நம்பகத்தன்மை வெளிப்பட்டுள்ளது என்று மோடி புகழாரம் சூட்டினார்.
இலங்கையில் போர் நடந்த பகுதியில் தற்போது மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்தியா சார்பில் அங்கு ரெயில்வே கட்டமைப்பு, மின் திட்டங்கள், வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 37 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநா சபை கூட்டத்தில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும்
இது சர்வதேச சமூகத்திடம் இருந்து நம்பிக்கையை பெற தூண்டுதலாக இருக்கும்’’ என்றார். தற்போது உலகின் முக்கிய பிரச்சினையாக வறுமை உள்ளது. அதை 15 ஆண்டுகளில் ஒழிக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஐ.நா. சபையில் உள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்” என்று செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.