இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பானக விசாரணை தீர்ப்பாயம் அமைக்ப்பது குறித்து அந்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்குற்ற தீர்ப்பாயம் அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அதிபர் சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு சாதகமாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
அதன்படி, உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை இலங்கை அமைத்து போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த வழி வகுத்துள்ளது.
இதனால், போர்க்குற்ற விசாரணை அமைப்பினை அமைக்கும் வழிமுறைகள் பற்றி முக்கிய ஆலோசனை நடத்துவதற்கு நாளை (22 ஆம் தேதி) கொழும்பு நகரில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிபர் சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, இலங்கையின் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.