இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்க உள்ளார்.
இலங்கையில் சில தினங்களுக்கு முன்பு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், இலங்கை சுதந்திரா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்தன. கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. இதில், ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையின் 15 வது பிரதமராக, இன்று நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்கிறார். அவருக்கு இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.