நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றுப் பிரதமரானால், நாடு அமைதி பெறும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது, மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.
இலங்கையில், வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சே, போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை, இலங்கை அனுராதபுரத்தில் ராஜபக்சே தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், உங்களை நம்பியே தேர்தலில் நான் நிற்கின்றேன். என்னை நீங்கள் ஆதரிக்க வேண்டும். நான் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், நாட்டில் நிலவும் வேற்றுமைகளை அகற்றுவேன். மத நல்லிணக்கத்தை உருவாக்குவேன். குறிப்பாக நாட்டில் அமைதியை கொண்டு வருவேன் என்றார்.