Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜாகிர் கான் ஓய்வும்.... நிகழ்த்திய சாதனைகளும்.....

Advertiesment
ஜாகிர் கான் ஓய்வும்.... நிகழ்த்திய சாதனைகளும்.....

லெனின் அகத்தியநாடன்

, வியாழன், 15 அக்டோபர் 2015 (16:48 IST)
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜாகிர் கான் இன்றுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 

 
அவருடைய ஓய்வு நிச்சயமாக இந்திய அணிக்கு ஒரு பேரிழப்பாகும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனெனில் அவர், போட்டிகளில் சீனியர் வீரராக இருந்தபோதும், புதிதாக பந்துவீச வந்தவர்களுக்கு நிறைய அறிவுரைகள் போட்டிகளின் இடையிலேயே கூறியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.
 
அது மட்டுமல்லாமல், அவரது பந்துவீசும் உத்தியில் இந்திய அணிக்கு புது மாதிரியை துவக்கி வைத்தவர். இவருக்கு முந்தைய வேகப்பந்து வீச்சாளர்கள் நேராக ஸ்டெம்புக்கு வீசுவார்கள் அல்லது ஆஃப் சைடில் விசுவார்கள்.
 
ஆனால், ஜாகிர் கான் மட்டும்தான் ஸ்விங் ஆகும் பந்துகளை வீசத் தொடங்கினார். ஆஃப் ஸ்விங், ஆன் ஸ்விங் இரண்டையும் வீசினார். மேலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிலேயே ஆக்ரோஷமாக பந்து வீசியவர்களிலும் இவர் என்றும் முதலிடத்தில் வகிப்பார்.
 
இவரது சாதனைகளில் சில.....
 
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது சிறந்த பந்து வீச்சை ஜாகிர் கான் பதிவு செய்துள்ளார். இவர் மொத்தம் 311 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு முன்னதாக, கபில்தேவ் 434 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
webdunia

 
உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகளையும், இலங்கையின் சமிந்தா வாஸ் 355 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
 
உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் ஜாகிர் கான் மற்றுன் ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளனர்.

webdunia

 
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்களில் ஜாகிர் கான் 610 விக்கெட்டுகள் எடுத்து 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முன்னதாக அனில் கும்ப்ளே, கபில்தேவ், ஹர்பஜன் சிங் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
 
டெஸ்ட் போட்டிகளில் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், ஜாகிர்கான் 237 வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் (325), ஷான் பொல்லாக் (252) முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர்.
 
குமார் சங்ககரா, சானத் ஜெயசூர்யா, மேத்யூ ஹைடன், கிரீம் ஸ்மித் ஆகிய இடதுகை பேட்ஸ்மேன்களை, இடது கை பந்துவீச்சாளரான ஜாகிர் கான் ஒவ்வொருவரையும் தலா 10 முறைக்கு மேல் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil