Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்முலா 1 கிராண்ட் பிரீ கார் பந்தயம் முதல் முறையாக இந்தியாவில்! - அக்டோபர் 30ஆம் தேதி

Advertiesment
பார்முலா 1 கிராண்ட் பிரீ கார் பந்தயம் முதல் முறையாக இந்தியாவில்! - அக்டோபர் 30ஆம் தேதி
, திங்கள், 24 அக்டோபர் 2011 (15:49 IST)
FILE
உலகெங்கிலும் மக்கள் வெறித்தனமாக ரசிக்கும் புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தயம் முதன் முதலாக இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதி இந்தப் பந்தயங்களை நாம் கண்டு மகிழலாம்.

புது டெல்லியில் புத் சர்வதேச கார்பந்தய ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 60 சுற்றுக்கள், அதாவது 'லேப்'கள் நடைபெறும்.

சர்க்கியூட் நீளம் 5.137 கிமீ. ஃஓர்ஸ் இந்தியா என்ற பார்முலா கார்பந்தய அணியை வைத்துள்ள விஜய் மல்லையாவின் முயற்சிகளினால் பார்முலா 1 கார்பந்தயங்கள் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்துள்ளது.

பார்முலா 1-இல் எச்.ஆர்.டி. அணிக்காக விளையாடும் இந்திய நட்சத்திரம் நரேன் கார்த்திகேயன் தனது சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் இதில் பங்கேற்கிறார். இது குறித்து அவர் மற்றற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

போர்ஸ் இந்தியாவின் டிரைவர் அட்ரியன் சுடில் ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆனால் அவர் இந்தியாவில் முதன்முதலாக நடைபெறுவது குறித்து தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்திய ரசிகர்கள் முன்னிலையில் சுடில் இந்திய அணியான ஃபோர்ஸ் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்வதால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

போர்ஸ் இந்தியா பார்முலா 1 கார்பந்தயங்களில் 49 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதில் பங்குபெறும் அணிகள் வருமாறு:

ரெட்புல் ரேசிங், மெக்லாரன், ஃபெராரி, மெர்சிடஸ், ரெனால்ட், ஃபோர்ஸ் இந்தியா, சாபர், டோரோ ரொஸ்ஸோ, வில்லியம்ஸ், டீம் லோட்டஸ், -எச்.ஆர்.டி. (நரேன் கார்த்திகேயன்), வர்ஜின்.

ரெட்புல் ரேசிங் அணியின் செபாஸ்டியன் வெட்டெல், மார்க் வெப்பர் ஆகியோர் முன்னணி ஓட்டுனர் வீரர்களாவர். இவர்கள் தரநிலையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

3வது இடத்தில் பெர்னாண்டோ அலான்சோ, 4வது இடத்தில் மார்க் வெப்பர், 5வது இடத்தில் லூயிஸ் ஹேமில்டன் ஆகியோர் உள்ளனர்.

மற்ற வீரர்களும் தரநிலையும் வருமாறு:

ஃபிலிப் மசா (6), நிகோ ரோஸ்பெர்க் (7), மைக்கேல் ஷூமாக்கர் (8), விடாலி பெட்ரோவ் (9), நிக் ஹெய்ட்ஃபெல்ட் (10) ஆகியோர் முன்னிலை வீரர்களாவர்.

சென்னையைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் 26வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் ஆட்டத்தை திரும்பத் திரும்பப் பார்த்து அலுத்துபோன இந்திய ரசிகர்களுக்கு பார்முலா 1 கார்பந்தய்ம் உண்மையில் ஒரு 'திரில்லிங்' அனுபவத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

உலகப் புகழ் பெற்ற முன்னணி வீரர்களின் கார்ப் பந்தயத் திறங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

அதே போல் நரேன் கார்க்த்திகேயன் இந்திய ரசிகர்களின் உற்சாகத்துடன் பந்தயத்தில் ஈடுபடுவதும் இந்த பார்முலா 1 போட்டிகள் வெற்றியடைவதை உறுதி செய்துள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி தயாராகுங்கள் 'திரில்' அனுபவத்திற்கு!

Share this Story:

Follow Webdunia tamil