Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயிடம் பேசியதால் மன அளவில் உறுதியானேன் – முகமது சிராஜ் நெகிழ்ச்சி!

Advertiesment
Mohammed siraj thanking his father and mother
, திங்கள், 18 ஜனவரி 2021 (16:55 IST)
இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தியது குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது போட்டி பிரிஸ்பேனில் தொடங்கி 4 நாட்கள் முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் கலக்கியுள்ளார். முதல் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காத நிலையில் சிராஜ் சிறப்பாக பந்துவீசியது ஆஸ்திரேலியாவை பெரிய ஸ்கோர் எட்டமுடியாமல் தடுத்ததற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

இதுகுறித்து பேசியுள்ள சிராஜ் ‘இந்தியாவில் இருக்கும் தாயிடம் தொலைபேசியில் பேசியபின்புதான் எனக்குள் நம்பிக்கையும், உற்சாகமும் வந்தது. என் நோக்கம் எல்லாம் என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதுதான். நான் தேசத்துக்காக ஆட வேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. அவர் இப்போது இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். அவரின் ஆசிகள் எப்போதும் எனக்கு இருக்கும் ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல வீரருக்கு ரெட் கார்டு... ரசிகர்கள் அதிர்ச்சி !!