இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானேவின் ஆட்டத்திறன் மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியில் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் மிக மோசமாக விளையாடி வந்தனர். லீட்ஸ் டெஸ்ட்டில் புஜாரா தட்டு தடுமாறி 91 ரன்கள் சேர்த்து தன் இடத்தைக் காப்பாற்றிக் கொண்டார். இந்நிலையில் ரஹானே மீது இப்போது விமர்சனங்கள் அதிகமாக எழ ஆரம்பித்துள்ளன.
ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கடந்த கால சாதனைகளையே சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. ஒரு அணியில் மூத்த வீரர்களாக இருப்பதால் இளம் வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதே போல உங்கள் இடத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.