உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய இந்திய அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தோல்வியிலிருந்து தப்பியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து ஆட்டத்துக்கான தகுதி போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆசியாவை சேர்ந்த 40 அணிகள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று ரவுண்டுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் இறுதியாக 12 அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த போட்டிகளில் இந்தியா அணி ‘இ’ பிரிவில் உள்ளது. தஜிகிஸ்தானில் நடந்த போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தானை எதிர் கொண்டது. ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தான் ஒரு கோல் போட்டுவிட, இந்தியாவின் நிலை சிக்கலுக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் கோல் முயற்சிகள் பலனளிக்காமல் போனது. போட்டி முடிய இருந்த கடைசி நிமிடங்களுக்குள் இந்தியா ஒரு கோல் வென்றது.
இதனால் 1-1 என்ற புள்ளிகளில் இந்தியா- ஆப்கானிஸ்தான் சமநிலையில் உள்ளதால் ஆட்டம் டிரா ஆனது. இதனால் தோல்வியிலிருந்து நூழிலையில் இந்திய அணி தப்பித்தது. இதுவரை நான்கு போட்டியில் 3 டிரா, ஒரு தோல்வி என்ற கணக்கில் உள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.