உலகக் கோப்பை ஹாக்கி: பரிதாபமாக வெளியேறியது இந்தியா

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (21:16 IST)
கடநத சில நாட்களாக உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளில் மொத்தம் 16 நாட்டின் அணிகள் இந்த தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம்பெற்றிருந்தது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் மோதியது. இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக கோல் போட போராடினாலும் அதிர்ஷ்டம் இன்று நெதர்லாந்து பக்கமே இருந்தது. எனவே நெதர்லாந்து அணி இந்திய அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்திய அணி இந்த போட்டி தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணி, ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதியில் இங்கிலாந்து அணி பெல்ஜியம் அணியுடனும், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணியுடனும் மோதும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments