Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின், ரோஹித் வெளியே ; ஜடேஜா, ஹனுமா விஹாரி உள்ளே – பெர்த் டெஸ்ட்டில் அதிரடி மாற்றம் !

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (11:07 IST)
நாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ரோஹித் ஆகியோர் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு மூன்று மாதக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்தது.

இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள இரண்டாவது பெர்த் டெஸ்ட்டில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினும், நடுவரிசை ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அஸ்வின் கடந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இருந்து வயிற்றில் தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேப்போல இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபீல்டிங்கின் போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக ஜடேஜாவும் , ஹனுமா விஹாரியும் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விளையாட இருக்கும் 13 பேர் கொண்ட உத்தேச அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அணி விவரம்
விராட் கோலி, லோகேஷ் ராகுல், விஜய், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பாண்ட், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஷமி, பூம்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments