Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் வெற்றி பெறும் என ரோபோ கணிப்பு

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (21:45 IST)
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது அரையிறுதி கட்டம் வந்துவிட்டது. இன்று இரவு 11.30 மணிக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையில் முதல் அரையிறுதி போட்டியும் நாளை குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியத்துக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெறும் என்று ரோபோ ஒன்று கணித்துள்ளது. ரஷ்யாவில் பாக்ஸ்டர் என்ற இந்த ரோபோவுக்கு இரு அணிகள் தொடர்பான புள்ளி விவரங்கள் சாப்ட்வேர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்த புள்ளி விவரங்களை வைத்து யார் வெற்றி பெறுவார் என்று இந்த ரோபோ கூறிய ஆரூடம் மூலம் பிரான்ஸ் அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இன்றைய போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கால்பந்து விளையாட்டில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர்களால் கூட இன்றைய வெற்றியை கணிக்க முடியாது என்றும் திறமை மட்டுமின்றி இன்று அதிர்ஷ்டமும் யாருக்கு கைகூடுகிறதோ அவர்களே வின்னர் என்றும் கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

நாளைக்கு ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கம்பீரின் மழுப்பல் பதில்!

மனு பாக்கர், குகேஷுக்கு கேல் ரத்னா விருது… துளசிமதிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

மீண்டும் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கிறாரா விராட் கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments