Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பை கால்பந்து: கடைசி 4 லீக் போட்டிகளின் முடிவுகள்

Advertiesment
உலகக்கோப்பை கால்பந்து: கடைசி 4 லீக் போட்டிகளின் முடிவுகள்
, வெள்ளி, 29 ஜூன் 2018 (07:20 IST)
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி 4 லீக் போட்டிகளின் போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்ப்போம்
 
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் போலந்து மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் போலந்து 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இருப்பினும் போலந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொலம்பியா மற்றும் சினேகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொலம்பியா 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 
webdunia
நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.  இருப்பினும் இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது
 
நேற்று நடைபெற்றநான்காவது போட்டியில் துனிஷியா மற்றும் பனாமா அணிகள் மோதின. இந்த போட்டியில் துனிஷியா 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.  உலகக்கோப்பை போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய துனிசியா அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேவாக்கை போல் என்னையும் செஞ்சுராதீங்க: கதறும் அஸ்வின்!