Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா

Advertiesment
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா
, வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (08:32 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெ
ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி போலவே தற்போது பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளும் புகழ் பெற்று வரும் நிலையில் இன்று முதல் மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது
 
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் என 10 அணிகள் மொத்தம் இந்த தொடரில் மோத உள்ளன 
 
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மதியம் 1 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ப்ரீத்தி கெளர், தன்யா பாட்டியா, தியோல், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளனர். மேலும் பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, பூஜா மற்றும் ராதா யாதவ் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர். மேலும் ஷிகா பாண்டே மற்றும் தீப்தி ஷர்மா என இரண்டு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் ஆஸ்திரேலியா அணியில் ரைச்சல் ஹெய்ன்ஸ், எரின் பர்ன்ஸ், ஆல்சா ஹீலே, பெத் மோனே ஆகியோர் பேட்டிங்கிலும், நிக்கோலா கேர்ரி, கார்டனர், டெலிசா கிம்மின்சி ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தி வருகின்றனர். இந்த அணியில் உள்ள ஒரே ஆல்ரவுடன்ரான எலிஸ் பெர்ரியும் அணிக்கு பெரிதும் கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்றைய முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் அணி வெற்றியுடன் தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 ரன்களில் 3 விக்கெட்: முதல் டெஸ்ட்டில் திணறும் இந்தியா!