Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி20 சேலஞ்ச் போட்டி: மந்தனா அபார பேட்டிங்

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (07:29 IST)
ஆண்கள் ஐபிஎல் போட்டி போன்றே விரைவில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டி ஆரம்பமாகவுள்ளது. அதற்கு அடித்தளமாக முதலில் மூன்று அணிகள் கொண்ட போட்டி மகளிர் சேலஞ்ச் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டிரெய்ல்பிளாசர்ஸ் , சூப்பர் நோவாஸ் , வெலாசிட்டி  என 3 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று டிரெய்ல்பிளாசர்ஸ் அணி, சூப்பர்நோவாஸ் அணியுடன் மோதியது. 
 
முதலில் பேட்டிங் செய்த டிரெய்ல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்ந்தது. அந்த அணியின் கேப்டன் மந்தனா 67 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த அணியின் டியோல் 36 ரன்கள் அடித்தார்.
 
141 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர்நோவாஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மந்தனா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments