Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடர் ரத்தாகுமா? மத்திய அமைச்சர் பதில்!

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (18:20 IST)
தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி அடுத்த மாதம் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில்  பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அந்த தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ‘தொடர் ரத்தாகுமா என்பது பற்றி இப்போதே கூற முடியாது. இதுபற்றி பிசிசிஐ மத்திய அரசுடன் ஆலோசித்த பிறகே வீரர்களை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments