Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா மும்பை?

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (07:50 IST)
வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா மும்பை?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டிகளின் கடைசி போட்டியில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டி மும்பை அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் தொடர் வெற்றி என்பது வீரர்களின் மனநிலையை அதிகரிக்கும் ஒரு போட்டி ஆகும். ஆனால் இந்த போட்டியில் பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகிய இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்கள் விளையாட வில்லை என்பதும் ஒரு சில போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா நேற்று களமிறங்கி வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனால் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் அபார பந்து வீச்சு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் முக்கிய பந்துவீச்சாளர்கள் போல்ட் மற்றும் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்ததால் மீதமுள்ள பந்துவீச்சாளர்களால் ஐதராபாத் அணியின் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பதும் ஐதராபாத் அணி 17.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு ஐதராபாத் நுழைந்து விட்டது. இதனால் கொல்கத்தா அணி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று டிரென்ட் போல்ட் மற்றும் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்ததன் மூலம் ஐதராபாத் அணிக்கு வேண்டுமென்றே விட்டுக் கொடுத்ததாக மும்பை அணி மீது குற்றச்சாட்டுகளை நெட்டிசன்கள் வீசி வருகின்றனர்
 
ஒரு அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டியாக இருந்தாலும் தொடர் வெற்றி என்பது கண்டிப்பாக வேண்டும் என்றும் இடையில் ஏற்படும் ஒரு தோல்வியை வீரர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments