Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியின் புதிய ஸ்பான்ஸர் யார்: ஜியோ உள்பட 4 நிறுவனங்கள் போட்டி

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:56 IST)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சீன நிறுவனத்தின் விவோ உடன் செய்துகொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது 
 
இதனை அடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப் பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல் கட்டமாக ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனம் ரூபாய் 300 கோடி வரை கொடுத்து ஸ்பான்ஸர்ஷிப் பெற முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராக இருந்து வருவதால் இந்த நிறுவனத்திற்கு ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி கொக்கோ கோலா, ஜியோ, அமேசான் உள்பட முன்னணி நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர்ஷிப்புக்காக போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் நிர்வாகிகள் எந்த நிறுவனத்தை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments