2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இன்றைய போட்டியின் போது மழை குறுக்கிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்
பொதுவாக ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் மழை பெய்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இறுதி போட்டியில் மழை பெய்தால் புள்ளிகள் வழங்க வாய்ப்பில்லை என்பதால் முடிவு அறிவித்தே ஆக வேண்டும்.
இறுதிப் போட்டியின் போது மழை பெய்து ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு அல்லது நேரம் நீடிக்கப்பட்டு போட்டியில் நடத்தப்படும். ஒருவேளை போட்டி நடத்த முடியாத அளவிற்கு கன மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டியில் அதிக புள்ளி எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இன்று இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது