Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோற்றாலும் மகளிர் கிரிக்கெட் அணியை கோலாகலமாக வரவேற்போம்: விளையாட்டுத்துறை அமைச்சர்

Advertiesment
விஜய் கோயல் | லார்ட்ஸ் | மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் | இந்தியா | இங்கிலாந்து | WWC2017 | sports minister vijay goel | India women vs England women | Ind v Eng | ICC Women World Cup
, திங்கள், 24 ஜூலை 2017 (07:15 IST)
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான், ஆனாலும் வெற்றிக்காக கடைசி வரை போராடிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உற்சாகமான வரவேற்பை அளிப்போம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.



 
 
நேற்று நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெறும் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்டது. இருப்பினும் அணியின் வீராங்கனைகள் அனைவரும் கடைசி வரை உறுதியுடன் போராடினர். 
 
இந்திய வீராங்கனைகள் மிகச்சிறப்பான ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் தெண்டுல்கர், சேவாக் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், “நமது மகளிர் கிரிக்கெட் அணி நேற்று மிகச்சிறப்பாக விளையாடிது. கோப்பையை வெல்லாவிட்டாலும் அவர்கள் நாடு திரும்பும் போது கோலாகல வரவேற்பு அளிப்போம்.” என்று என்று விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி