Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ வேண்டாம் இப்போ வேண்டுமாம்; பல்டி அடித்த ரவி சாஸ்திரி

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (14:15 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது வீரர்களுக்கு ஓய்வு தேவை என பயிற்சி போட்டிகளை வேண்டாம் என்ற ரவி சாஸ்திரி தற்போது அதிக பயிற்சி போட்டிகள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய தொடர்களில் விளையாடியது. டி20 தொடரை தவிர மற்ற இரண்டு தொடரை இழந்தது. டெஸ்ட் தொடரை 1-4 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்திய அணி இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் முன் பயிற்சி ஆட்டங்களை குறைத்து கொண்டது. வீரர்களுக்கு ஓய்வு தேவை என கூறினர்.
 
இதற்கு காரணம் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோஹ்லி என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரவி சாஸ்திரி அப்படியே பல்டி அடித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது:-
 
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன் நாங்கள் 2 அல்லது 3 பயிற்சி போட்டிகளில் ஆட விரும்புகிறோம். ஆனால் நேரம் இல்லை. டெஸ்ட் போட்டிகளுக்கு முன் 10 நாட்கள்தான் இடைவெளி உள்ளது. பயிற்சி போட்டிகள் இல்லாததால் நாங்கள் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு பின் நன்றாக ஆடுகிறோம் என்று கூறியுள்ளார்.
 
இங்கிலாந்து தொடருக்கு முன் பயிற்சி போட்டிகள் வேண்டாம் என்று கூறிய ரவி சாஸ்திரி, தற்போது பயிற்சி போட்டிகள் தேவை என்று கூறியுள்ளார். மேலும் ஆனால் பயிற்சிகள் விளையாட போதுமான நாட்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments