Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒராண்டுக்குப் பின் களமிறங்கிய வார்னர் சதமடித்து அசத்தல் – இமாலய இலக்கு வைத்த ஆஸி

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (12:27 IST)
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று தொடங்கவுள்ளது.

3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணிஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு காலம் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்குப் பின் முதன்முதலாக இந்த போட்டியின் மூலம் டி20 போட்டிகளில் களமிறங்கினர்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணியில் பிஞ்ச் மற்றும் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிற்ப்பாக விளையாடிய பின்ச் அரைசதம் அடித்து அவுட் ஆனார். தொடர்ந்து ஆடிய வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் சதம் அடித்தார். மேக்ஸ்வெல் தன் பங்குக்கு 28 பந்துகளில் 62 ரன்களை சேர்த்ததால் ஆஸி அணி 20 ஓவர்கள் முடிவில் 233 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்தது.

அதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments