ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் டேவிட் வார்னர் மற்றும் லாபுசாஞ்சே புதிய சாதனை செய்துள்ளனர். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் முதல் நாளில் 294 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளனர்
இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் ஜஸ்டின் லங்சர் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் கடந்த 1998ம் ஆண்டு 279 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களின் இரண்டாவது விகெட் பார்ட்னர்ஷிப் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது முறியடிக்கப்பட்டது மட்டுமன்றி இன்னும் இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் இருப்பதால் இன்னும் பல சாதனைகள் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 4 ரன்களில் பர்ன்ஸ் அவுட் ஆனாலும் டேவிட் வார்னர் மற்றும் லாபுசாஞ்சே அதிரடியாக விளையாடி வருவதால் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 302 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் வார்னர் 166 லாபுசாஞ்சே 126 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்