Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பைக்கான இந்திய அணி – அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண் !

Advertiesment
உலகக்கோப்பைக்கான இந்திய அணி – அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண் !
, செவ்வாய், 5 மார்ச் 2019 (08:57 IST)
உலகக்கோப்பையில் விளையாட தான் விரும்பும் இந்திய அணியின் பட்டியலை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் அறிவித்துள்ளார்.

இந்தியா உலகக்கோப்பையை முன்னதானக் கடைசி சர்வதேசத் தொட்ரை  இப்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வருகிறது. உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டே ஆடுகளங்களை மந்தமாக வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் முதல் ஒருநாள் போட்டியில் கூட 250 ரன்களுக்குக் கம்மியான இலக்கைக் கூட 49 ஆவது ஓவர் வரை சென்று போராடி வெற்றிப் பெற வேண்டிய சூழல் உருவானது.

இது இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைப் போட்டிகளில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய வீரர்கள் யார் என்று அறிந்து கொள்வதில் இந்திய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
webdunia

இதையடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணித்தேர்வை வெளியிட ஆரம்பித்துள்ளனர். அதையொட்டி கம்பீரை அடுத்து முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் தனது உலகக்கோப்பை இந்திய அணிட்யை வெளியிட்டுள்ளார். அவர் அதிர்ச்சியளிக்கும் விதமாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யாமல் விட்டுள்ளார். அவரின் இந்திய அணி :-

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, ராகுல், தினேஷ் கார்த்திக், கலீல் அகமெட்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் கிரிக்கெட் : இந்திய அணி தோல்வி