பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

Mahendran
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (18:35 IST)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ரோஜர் பின்னி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக, துணை தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பிசிசிஐ உறுப்பினர் தேர்வு விதிகளின்படி, ஒரு நபர் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்கலாம். ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதவி வகிக்கலாம். ஆனால், ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தால், அவர்கள் கண்டிப்பாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விதிமுறையின் அடிப்படையில் ரோஜர் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராஜீவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

2வது இன்னின்ங்சில் இந்தியா.. வெற்றிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

அடுத்த கட்டுரையில்
Show comments