ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியான தோல்வியை பெற்று வரும் விராத் கோஹ்லியின் பெங்களூர் அணி, நேற்று முன் தினம் நடந்த போட்டியில் வெறும் 139 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 119 ரன்களில் சுருண்டது.
இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்த கோஹ்லியா இப்படி விளையாடுவது? என்று அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வரும் நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் தனது காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'விராத் கோலி முதலில் சென்று தனது முகத்தை தானே கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் தான் இது போன்ற கேவலமான ஷாட்களை விளையாடுகிறாரா என எனக்கு சந்தேகமாக உள்ளது. முதலில் அவர் கேப்டன் என்பதை உணர வேண்டும். தவிர, பார்ம் இல்லாத போது களத்தில் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடி, இழந்த பார்மை மீட்க முதலில் முயற்சிக்க வேண்டும் பின் அதிரடியாக ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.’ என்று காட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூரு அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.