Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (12:32 IST)
இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற தகவலை விராட் கோலி நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார். 

 
இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை அரையிறுதி கனவு ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவோடு முடிந்து போனது. இந்த வெற்றியின் மூலம் நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன.  
 
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இது 4 வது முறையாகும். இதற்கு முன் 2009, 2010, 2012 ஆகிய சீசன்களிலும் இந்தியா இதேபோல் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
 
தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்டிங் செய்தது. இதில் இந்தியா அணி 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பையின் அரையிறுதிக்கே தகுதிபெறாமல் இந்திய அணி வெளியேறியதைவிட, விராட் கோலி இத்தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 
 
இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற தகவலை விராட் கோலி நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. ரோகித் அதற்காக காத்துக் கொண்டுள்ளார். இந்திய அணி சிறந்த நபரிடம் தான் செல்கிறது. அந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments