Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகல்: ரசிகர்கள் வருத்தம்!

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகல்: ரசிகர்கள் வருத்தம்!
, செவ்வாய், 9 நவம்பர் 2021 (10:23 IST)
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

 
இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை அரையிறுதி கனவு ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவோடு முடிந்து போனது. இந்த வெற்றியின் மூலம் நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. 
 
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இது 4 வது முறையாகும். இதற்கு முன் 2009, 2010, 2012 ஆகிய சீசன்களிலும் இந்தியா இதேபோல் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
webdunia
தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்டிங் செய்தது. இதில் இந்தியா அணி 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
டி20 உலக கோப்பையின் அரையிறுதிக்கே தகுதிபெறாமல் இந்திய அணி வெளியேறியதைவிட, விராட் கோலி இத்தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷன் விருது...