Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியின் புதிய கேப்டனுக்கு கோலியின் உணர்ச்சிகரமான மெஸேஜ்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (09:01 IST)
ஆர் சி பி அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பாஃப் டு பிளஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். ஆனால் இப்போது அவர் சர்வதேச போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் அவருக்கான பணிச்சுமை குறைந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் ஆர் சி பி அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் அதில் கோலி விருப்பம் காட்டுவது போல தெரியவில்லை.

இதையடுத்து பல யூகங்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டு பிளஸ்சிஸ் ஆர் சிபி அணியின் கேப்டனாக மார்ச் 12 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆர் சி பி யின் முன்னாள் கேப்டன் கோலி ’பல வருட நல்ல நண்பருக்கு கேப்டன்சியை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. கிரிக்கெட்டை தவிர்த்து நான் தெரிந்துகொண்ட நபர்களில் டு பிளஸ்சியும் ஒருவர்.  அவருடனான எனது பார்ட்னர்ஷிப் உற்சாகமாக இருக்கும். எங்கள் அணி சமநிலையோடும் வலுவாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் தொடங்குவதற்காக என்னால் காத்திருக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments