Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முச்சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் விராத் கோஹ்லி செய்த தியாகம்

Advertiesment
முச்சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் விராத் கோஹ்லி செய்த தியாகம்
, வெள்ளி, 11 அக்டோபர் 2019 (21:55 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மிக அருமையாக விளையாடி இரட்டை சதம் அடித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
விராத் கோஹ்லி 336 பந்துகளில் 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அருமையாக ஆடிக்கொண்டிருந்த போது இந்திய அணியின் ஸ்கோர் 601 வந்தவுடன் விராத் டிக்ளேர் செய்தார். இன்னும் 46 ரன்கள் எடுத்தால் முச்சதம் என்ற சாதனையை ஏற்படுத்த வழி இருந்தும் போட்டியின் வெற்றியே முக்கியம் என்று அவர் செய்த தியாகம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது 
விராத்தின் தியாகத்திற்கு கைமேல் பலன் கொடுத்துள்ளது போல் தென்னாப்பிரிக்கா அணியினர் இன்று 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நாளை மீதி உள்ள 7 விக்கெட்டுகளை விழுந்து ஃபாலோ ஆன் ஆனால் இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரபாடா செய்த சொதப்பல், சிரித்து கலாய்த்த கோலி..வைரல் வீடியோ