இனிமேல் ஐசிசி போட்டிகளில் USA அணி விளையாட முடியாது: ஜெய்ஷா போட்ட அதிரடி உத்தரவு..!

Mahendran
புதன், 24 செப்டம்பர் 2025 (14:16 IST)
அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தின் (USA Cricket) உறுப்பினர் தகுதியை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.   இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த ஓராண்டாக அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை ஐ.சி.சி. தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த வாரியம் ஒரு முறையான நிர்வாக அமைப்பை உருவாக்க தவறியது, அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுவிடம் தேசிய நிர்வாக அமைப்பின் அங்கீகாரத்தை பெற தவறியது, மற்றும் கிரிக்கெட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த இடைநீக்கம் செய்யப்பட்டாலும், அமெரிக்க தேசிய அணிகள் ஐ.சி.சி. போட்டிகளிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியையும் தக்கவைத்து கொள்ளும். வீரர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை ஐ.சி.சி. தற்காலிகமாக மேற்பார்வையிடும். 
 
அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் தகுதியை மீட்டெடுக்க, அதன் நிர்வாக கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை செய்யுமாறு ஐ.சி.சி. நிபந்தனை விதித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணகி நகர் கார்த்திகாவின் இந்திய கபடி அணி தங்கம்.. உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

டி 20 தொடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இந்திய அணிக்கு பெரும் சவாலா?

விற்பனைக்கு வருகிறது பெங்களூரு ஐபிஎல் அணி.. 6 நிறுவனங்கள் போட்டா போட்டி..!

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

அடுத்த கட்டுரையில்
Show comments