Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து பட்டதால் சுருண்டு விழுந்த நடுவர்: இறுதி போட்ட்யில் நடந்த பரபரப்பு

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (08:31 IST)
பந்து பட்டதால் சுருண்டு விழுந்த நடுவர்
கடந்த சில நாட்களாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணி மற்றும் சௌராஷ்ட்ரா அணிகளுக்கு இடையே நேற்று ராஜ்காட்டில் தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வீரர் ஒருவர் பந்தை எடுத்து மிக வேகமாக ஸ்டம்பை நோக்கி எறிந்தார். பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்குவதற்காக அவர் பந்தை எறிந்தாக கூறப்படுகிறது.
 
ஆனால் அவர் எறிந்த பந்து எதிர்பாராதவிதமாக நடுவரின் அடிவயிற்றில் பட்டதால் அந்த இடத்திலேயே  நடுவர் சுருண்டு விழுந்தார். இதனால் வீரர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் இருப்பினும் அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், அவர் இன்னும் ஓரிரு நாளில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென பந்து பட்டு நடுவர் ஒருவர் சுருண்டு விழுந்ததை அடுத்து தற்போது மாற்று நடுவர் நியமனம் செய்யப்பட்டு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments