இந்திய அணியில் தேர்வாக இளம்வீரர்கள் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானத் தொடரை வென்றுள்ளது. இந்த வெற்றியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் நிரந்தரமான வாய்ப்புக் கிடைப்பதில்லை. சுழற்சி முறையில்தான் வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.
இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள உமேஷ் ‘அணியில் 40க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பவுலர்களே 7க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதனால் இளம் வீரர்கள் அணிக்குள் வரவேண்டுமானால் அவர்கள் எங்களை விட சிறந்தவர்களாக இருந்தால்தான் முடியும். அனைத்துப் போட்டிகளிலும் நான் ஆடுவேனா என்பது என் கைகளில் இல்லை. அணிக்குள் ஆரோக்யமானப் போட்டி நிலவுகிறது.
நான் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத போது இந்தியா ஏ அணியில் தேர்வு செய்தனர். அதனால் எப்போதும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் என்னவெல்லாம் போட்டிகளில் வாய்ப்பிருக்கிறதோ என்னைத் தேர்வு செய்யுங்கள் எனக் கூறினேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.