Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு இது தான் வேலையா? சீன்டியவர்களுக்கு சேவக் பதிலடி!!

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (11:50 IST)
குர்மேகர் கார் விஷயத்தில் எந்த உள்நோக்கத்துடனும் டுவிட்டரில் பதிவு செய்யவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.


 
 
காஷ்மீரில் நடந்த போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மந்தீப் சிங்கின் மகளான குர்மேகர் கார், தனது பேஸ்புக் பக்கத்தில், எனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் தான் கொன்றது, என வெளியிட்டிருந்தார்.
 
அதனால் ஏ.பி.வி.பி. அமைப்பினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக கருதி அவரை கற்பழித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த சம்பவம் சேவக்கின் கண்ணில் பட்டது, அதனால் அவரை கலாய்க்கும் விதமாக, நான் இரண்டு முச்சதம் அடிக்கவில்லை, எனது பேட் தான் அடித்தது, என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
இதையடுத்து பலர் சேவக்கின் பதிவில் உள்நோக்கம் உள்ளதாக கூறினர். இது தொடர்பாக சேவக் கூறுகையில், குர்மேக்கரின் கருத்துக்கும் எனது டுவிட்டர் பதிவிற்கும் எந்த உள்நோக்கமும் இல்லை. இது வெறும் காமெடி மட்டுதான் என தெரிவித்துள்ளார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments