Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா !!

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (10:02 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதற்காக விளையாட்டு அரங்கம், வீரரர்கள் தேர்வு நடைபெற்று போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 
 
இப்படியான நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.
 
இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments